வெகுவிரைவில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்கும் - ஜே.வி.பி.

17 Feb, 2022 | 05:21 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வெகுவிரைவில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஐ.ஓ.சி.யை விட அதிகமாக எரிபொருள் விலையை அதிகரிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மன்னார் - பேசாலையில் எரிபொருள் தயாரிக்கப்படும் என்றும் , அதன் மூலம் நாட்டுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டது.

எனினும் அது வெறும் கனவாகவே உள்ளது. 

முன்னர் பணம் செலுத்தி எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டது,எனினும் தற்போது கடன் அடிப்படையிலேயே எரிபொருள் இறக்குமதி செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

அண்மையில் இந்தியாவிலிருந்து எரிபொருள் கப்பலொன்று வருகை தந்துள்ளது. 

அதனைப் பொறுப்பேற்பதற்காக அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தனவுடன் உதய கம்மன்பிலவும் துறைமுகத்திற்குச் சென்றுள்ளார். 

எந்தளவிற்கு புதுமைமிக்க நாடு இது? 

ஐ.ஓ.சி. எரிபொருள் விலையை அதிகரித்தமையால் , இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குரிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கே பாவனையாளர்கள் செல்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் விற்பனை செய்யப்படும் அளவு அதிகரிக்கும். 

இதனால் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. 

எனவே ஐ.ஓ.சி.யை விட அதிகமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08