இலங்கை வருகின்றார் பொதுநலவாய செயலாளர் நாயகம்

Published By: Robert

10 Oct, 2016 | 04:03 PM
image

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்றிசியா ஸ்கொட்லன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். புதன்கிழமை ஆரம்பமாக உள்ள  உலக ஏற்றுமதி அபிவிருத்தி ஒன்றியத்தின்  16 வது  மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளார்.

16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி ஒன்றியத்தின் மாநாடு புதன்கிழமை ஆரம்பமாக உள்ளது. சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபவத்தில் நடைப்பெற உள்ள இந்த மாநாடு புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் நடைப்பெற உள்ளது. 

இதில் கலந்துக் கொள்வதற்காக பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கலந்துக் கொள்ள உள்ள நிலையில் பன்னாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக் கொள்ள உள்ளனர். மேலும் ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் பீற்றர் ஸ்ஜெடோவும் உலக ஏற்றுமதி அபிவிருத்தி ஒன்றியத்தின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை வர உள்ளனர். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைப்பெற உள்ள உலக ஏற்றுமதி அபிவிருத்தி ஒன்றியத்தின் மாநாட்டில் உலக ஏற்றுமதி துறையில் காணப்படும் சவால்கள் மற்றும் பல்துறைசார் வர்த்தக பிரச்சினைகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளது. இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலய வர்த்தக சவால்கள் குறித்து விN~ட உரையாற்ற உள்ளார். 

இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த மாநாடு அமையும் என எதிர் பார்க்கப்படுவதோடு மேலும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியிலான உறவுகளை வலுப்படுத்துவதும் மாநாட்டின் நோக்கமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27