குருநாகல் மாவடத்தில் இவ் வருடத்தினுள் மாத்திரம் 21  எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 

தற்போது எச்.ஐ.வி. இல் குருநாகல் மாவட்டம் இலங்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தகாத விபசார நிலையங்களை நடாத்திச் செல்லும் சில களியாட்ட நிலையங்களுக்கு செல்வதால் அதிகமாக இந்நோய் ஏற்படுகின்றது.  மேலும் எச்.ஐ.வி. ஆல் பீடிக்கப்பட்டவர்களென சந்தேகிக்கப்படும் 1600 பேர் தமது நிறுவனத்தினால் இனம் காணக்கூடியதாக இருந்தது என குருநாகல் மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். பீ. எல். விக்ரமசிங்க தெரிவித்தார்.