பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலவருடங்கள் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்படுவோருக்கான இழப்பீட்டை வழங்குவது யார்? - அம்பிகா சற்குணநாதன்

Published By: Vishnu

16 Feb, 2022 | 08:02 PM
image

 (நா.தனுஜா)

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக தடுத்து வைக்கப்படும் நபர்கள், நிரபராதி என்று விடுதலை செய்யப்படக்கூடிய சம்பவங்களைப் பொறுத்தமட்டில், அத்தனை வருடகாலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நிதி மற்றும் ஏனைய இழப்புக்கள், உளவியல் நெருக்கடி ஆகியவற்றுக்கான இழப்பீட்டை வழங்கப்போவது யார்? என்று சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் ஆலோசனையின்படி இறுதி யுத்தகாலப்பகுதியில் இயக்கத்திற்காக கொழும்பில் நிதி சேகரித்து வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி பயங்கரவாதப் புலனாய்வுப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட கந்தப்பு ராஜசேகர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 12 வருடங்களின் பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 பயங்கரவாத தடை சட்டத்தின் மிகமோசமான சரத்துக்கள் நபரொருவரைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதற்கும் எவ்வித விசாரணைகளுமின்றி 18 மாதங்கள்வரை தடுத்துவைப்பதற்குமான அதிகாரத்தை வழங்குவதுடன் அது சந்தேகநபர்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கும் வழிவகுக்கின்றது என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவருகின்றனர்.

 இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல்கைதியான கந்தப்பு ராஜசேகர் 12 வருடங்களின் பின்னர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04