வடக்கு மாகாணசபை உறுப்பினர் சி.மயுரன் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தடையாக இருப்பவர்களை கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஞானசார தேரர் மற்றும் என்னையும் கைதுசெய்தால் மட்டுமே நல்லிணக்க செயற்பாடுகள் தடையின்றி முன் செல்லுமென கூறியுள்ளார்.

ஆனால் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நாங்கள் தடையாக இருக்கவில்லை. மாறாக நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கும் அமைச்சர் மனோகணேசன் மற்றும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரே தடையாக இருக்கின்றனர்.

எனவே அவர்கள் இருவரையுமே முதலில் கைதுசெய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.