மொடலாக மாறிய 60 வயது கூலித்தொழிலாளி

Published By: Digital Desk 3

16 Feb, 2022 | 12:39 PM
image

60 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் மொடலாக மாறிய சம்பம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் வெண்ணக்காடு, கொடிவள்ளி கிராமத்தில் மம்மிக்கா என்ற  60 வயதான கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார்.

அவர்  பொதுவாக சாரமும் சட்டையும் அணிவதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

ஒருநாள் இவர் வழக்கம்போல் வயலுக்கு வேலைக்குச் சென்றுகொண்டிருந்த போது புகைப்படக் கலைஞர் ஷரீக் வயலில் இவரைப் அவதானித்துள்ளார்.

அவரைப் பார்த்தவுடன் சில புகைப்படங்களை  எடுத்துள்ளார்.

பின்னர் அந்தப் புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறித்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியுள்ளது. 

இந்நிலையில்தான் ஷரீக் தனது ஆடையகத்திற்காக விளம்பர மொடலைத் தேடியுள்ளார்.

ஒரு வார இடைவெளியில் எத்தனையோ பேரை பார்த்தாலும் அவருக்கு திருப்தி வரவில்லை. பின்னர் மம்மிக்காவிடம் மொடல் ஆகுமாறு  கேட்டுள்ளார். மம்மிக்காவும் ஒப்புக்கொள்ள, அவரது தோற்றம் முழுமையாக மாற்றப்பட்டது. 

முடி திருத்தம், ஒப்பனை மற்றும் ஆடை மாற்றப்பட்டு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வார இறுதியில் ஷரீக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மம்மிகாவின் மொடலிங் விளம்பரம் ஏராளமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 

மம்மிக்கா அளித்த பேட்டியொன்றில், தினக்கூலி வேலைக்கு மத்தியில் இதுபோன்ற மொடலிங் வாய்ப்புகள் வந்தால் அதையும் செய்ய ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right