உத்தேச நாளாந்த மின்விநியோக தடை யோசனைக்கு அனுமதி வழங்க முடியாது - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

Published By: Digital Desk 3

16 Feb, 2022 | 10:40 AM
image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நாடுதழுவிய ரீதியில் நாளாந்தம் மின்விநியோகத்தை துண்டிக்க அனுமதி வழங்க முடியாது. தேசிய மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் காணப்படும் தற்காலிக பிரச்சினைக்கு தீர்வு காண பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ள யோசனைகளை இலங்கை மின்சார சபை முறையாக செயற்படுத்தினால் தொடர்ச்சியாக மாதகணக்கில் மின்விநியோகத்தை துண்டிப்பதற்கான அவசியம் கிடையாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இரவு வேளைகளில் தெருவிளக்கு பாவனையினை மட்டுப்படுத்தி 80 சதவீத மின்சாரத்தை சேமிக்க உள்ளூராட்சிமன்ற சபை உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். சகல அரச நிறுவனங்களிலும் பிற்பகல் 2.30 மணிமுதல் 4.30 மணிவரையான காலப்பகுதியில் குளிரூட்டி செயலிழக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் நாளாந்தம்  நாடுதழுவிய ரீதியில் மின்விநியோகத்தை துண்டிக்க அனுமதி வழங்கமாறு இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை  விரிவுப்படுத்தப்பட்ட வகையில் மீள்பரிசீலனை செய்யப்பட்டது.

பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் தடையின்றிய வகையில் மின்விநியோகத்தை வழங்குமாறும்,மின்விநியோக கட்டடைமைப்பில் காணப்படும் தற்காலிக பிரச்சினைக்கு தீர்வு காண மாற்றுத்திட்டங்களை செயற்படுத்துமாறும் இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு செயற்படாது. தேசிய மின்னுற்பத்தி மற்றும் விநியோக கட்;டமைப்பில் தற்போது காணப்படும் தற்காலிக பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்களை துரிதகரமாக செயற்படுத்துமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.

இன்று முதல் நீர்மின்னுற்பத்தி 50 வீதத்தினால் குறைக்கப்படும். எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் வரை நீர்மின்னுற்பத்தியை சேமிக்க முடியும்.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காத பட்சத்திலும்,மின்னுற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகள் செயலிழக்கும் பட்சத்திலும் மாத்திரம் மின்விநியோகம் தடைப்படும் என்பது பொது காரணியாகும்.

எதிர்வரும் மூன்றுமாத காலத்திற்கு தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு தடையின்றி வழங்குவதாக வலுசக்தி அமைச்சு வாக்குறுதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்யும் சட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை ரூபாவை விநியோகித்தால் அதற்கான டொலரை விநியோகிக்க தயார் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை மின்சார சபை நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சட்டம் வெகுவிரைவில் உருவாக்கப்படும்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய செயற்பட்டால் இம்மாதம் முதல் நாளாந்தம் மின்விநியோகத்தை துண்டிப்பது அவசியமற்றதாகும் என உணரப்பட்டுள்ளது.

தேசிய மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் காணப்படும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண பொது மக்களினதும்,அரச மற்றும் தனியார்  நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

மின்பாவனையாளர்கள் மின்பாவனையை இயலுமான அளவு சிக்கனப்படுத்திக் கொண்டால் தற்போதைய நெருக்கடியை ஒப்பீட்டளவில் முகாமைத்துவம் செய்ய முடியும்.

மின்பிறப்பாக்கிகள் உள்ள தொடர்மாடி குடியிறுப்புக்களில் குளிரூட்டி இயந்திரத்தை தனிப்பட்ட மின்பிறப்பாக்கி ஊடாக பயன்படுத்துமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சகல அரச நிறுவனங்களிலும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 வரையிலான இடைப்பட்ட காலத்தில் குளிரூட்டிகளை செயலிழக்க செய்து தடையின்றிய மின்விநியோகத்திற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இரவு வேளைகளில் தெருவிளக்குகளின் பயன்பாட்டை 80 சதவீதத்தினால் குறைப்பதற்கு உள்ளுராட்சிமன்றங்களும்,வீதி அபிவிருத்தி அதிகார சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் பொது மக்களும் இயலுமான அளவில் மின்பாவனையை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முpன்னு மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குதலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் 200 மெகாவாட் மின் தேசிய மின்கட்டமைப்பில் இருந்து இழக்கப்பட்டால் மாத்திரம் மின்விநியோகத்தை துண்டிப்பது அவசியமாகும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய 300 மெகாவாட் மின் இழக்கப்பட்டால் ஒருமணித்தியாலம் மின்துண்டிப்பும்,400 மெகாவாட் மின் இழக்கப்பட்டால்  2 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பும் மேற்கொள்ளலாம்.

பொதுமக்களை நெருக்கடிக்குள்ளாக்காத வகையில் தேசிய மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் காணப்படும் தற்காலிக பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21