இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப்பெட்டி, இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை - புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்

Published By: Digital Desk 4

15 Feb, 2022 | 09:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரத பெட்டிகள் மற்றும் எஞ்சின்களை பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறதால் அரச நிதி மாத்திரம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

Articles Tagged Under: புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் | Virakesari .lk

கொழும்பில் உள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

போக்குவரத்து சேவையின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு கூட்டத்தில் புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் புகையிரத சேவை தொடர்பிலான உண்மை நிலைவரத்தை குறிப்பிடவில்லை.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 120 புகையிரத  பெட்டிகளில் 31 பெட்டிகள் மாத்திரமே பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

40 புகையிரத பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளதாக புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் 760 கோடி செலவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள 10 புகையிரத எஞ்சின்களில் 03 எஞ்சின்கள் மாத்திரமே தற்போது சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு புகையிரத திணைக்களத்திற்கு பலமுறை அறிவுறுத்தியுள்ளோம்.

இந்தியாவின் கடன் நிவாரண திட்டத்தில் 1.5 பில்லியன் டொலர் செலவில் மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி செயற்திட்டத்தின் பின்னணியில் பாரிய மோசடி காணப்படுகிறது.இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கமைய வடக்கு புகையிரத பாதையினை இரட்டை புகையிரத பாதையாக நிர்மாணிக்க முடியும்.

இருப்பினும் புகையிரத திணைக்களம் இலாபமடையும் நோக்கில் இச்செயற்திட்டத்தின் ஊடாக வடக்கு புகையிரத பாதையினை ஒரு புகையிரத பாதையாக நிர்மாணிக்க முயற்சிக்கிறது.இதனூடாக பாரிய நிதிமோசடி இடம்பெறும்.

புகையிரத ஆசன ஒதுக்கல் சேவையின் போது பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணத்தை 50சதவீதமாக அதிகரிக்க புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை வலுவிழக்க செய்ய போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம்.

புகையிரத போக்குவரத்து சேவையினை பயன்படுத்த பொதுபயணிகள் ஆசனம் ஒதுக்கிய பின்னர் அவர்களால் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போகும் பட்சத்தில் அவர்கள் ஆசன ஒதுக்கீட்டுக்காக செலுத்திய கட்டணத்தில் 25 சதவீதத்தை புகையிரத திணைக்களம் அறவிட்டு மிகுதி தொகையை குறித்த பயணிக்கு வழங்கும்.

இவ்வாறு புகையிரத திணைக்களம் அறவிடும் கட்டண சதவீதத்தை 50 சதவீதமாக அதிகரிக்கும் சுற்றறிக்கையை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் கடந்த 10ஆம் திகதி வெளியிட்டு அதனை எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி முதல் அமுல்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.இந்த சுற்றறிக்கையை செயற்படுத்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.பொது பயணிகளும் இதற்கு எதிர்பை வெளிப்படுத்த வேண்டும் என புகையிரத போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயணிகளிடம் கோரிக்கை விடுத்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04