இங்கிலாந்து மற்றும் பங்களதேஷ் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மற்றும் பங்களதேஷ் அணியினருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தினால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டியில் பங்களதேஷ் அணி 238 ஓட்டங்களை பெற்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 204 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்நிலையில் ஜோஸ் பட்லர் 57 ஓட்டங்களை பெற்றிருந்த போது தஸ்கின் அஹமட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.

போட்டியின் முக்கியமான விக்கட் வீழ்த்தப்பட்ட நிலையில், பங்களதேஷ் அணியினர் தமது மகிழ்ச்சியை ஆரவாரமாக வெளியிட்டனர்.

இதன் போது பட்லர்  மற்றும் பங்களதேஷ் அணியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடுவர்கள் குறுக்கிட்டு  வாக்குவாதத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் போட்டி நிறைவடைந்தும் வாக்குவாதம் தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களதேஷ் வெற்றியின் ரூலம் ஒருநாள் தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.