மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

Published By: Digital Desk 4

15 Feb, 2022 | 09:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று  தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 08ஆம் திகதி மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், திருத்தங்களுடன் இது நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன் ஊடாக 1981ஆம் ஆண்டு 66ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் எனப் பெயர் மாற்றம் பெறுவது உள்ளிட்ட திருத்தங்களுக்கு உள்ளாகிறது.

இதற்கமைய சட்ட மூலத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று  தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதன் மூலம் 2022ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24