பஸ் விபத்து : மாணவர்கள் உட்பட 72 பேர் காயம்

Published By: Robert

10 Oct, 2016 | 11:44 AM
image

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் மெராயா ஆகர பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக அக்கரப்பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயங்களுக்குள்ளாகியவர்கள் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிக்சைகளை பெற்ற பின் வீடு திரும்புவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்தில் காயங்களுக்குள்ளாகியவர்களில் ஆண்கள் 40 பேரும், பெண்கள் 32 பேரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33