கொரோனா தடுப்பூசி அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியமில்லை 

Published By: Digital Desk 4

15 Feb, 2022 | 03:11 PM
image

சிவனொளிபாதமலைக்கு இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்ட பிரதேசங்கள் வழிகளின் ஊடாக யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் கொரோனா தடுப்பூசி அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியமில்லை என இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொகுபோதாகம தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொள்வோர் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

எவ்வாறாயினும், கொரோனா தடுப்பூசி அட்டைகளை உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என தெரிவித்த மாலினி லொகுபோதாகம, தடுப்பூசி அட்டை உடன் இருப்பது பாதுாப்பானது எனவும் தெரிவித்தார்.

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றளர். புதிய வைரஸ் தொற்று நோய்கள் குறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக சுகாதார வழிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47