யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வி­களை பெற்றுக் கொடுக்கும் வகை­யி­லான பிர­மாண்­ட­மான இசை நிகழ்ச்­சி­களை இல­வ­ச­மாக நடத்தி தரு­வ­தற்கு நாங்கள் தயா­ராக உள்ளோம் என தென்­னிந்­திய பிரபல பின்னணிப் பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கூட்­டாக தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வா­றான செயற்­பாட்­டிற்கு அனைத்து தரப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட முன்­வர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்­துள்­ளனர்.

யாழ்ப்­பா­ணத்தில் நேற்று நடை­பெற்ற `நண்­பேண்டா` இசை நிகழ்ச்­சியில் ஒன்றில் பங்கு கொள்­வ­தற்­காக வரு­கை­தந்த இவர்கள் யாழ்ப்­பா­ணத்தில் உள்ள ஜெட்வின் ஹோட்­டலில் நேற்று நண்­பகல் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்­ட­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர். 

இதில் கலந்து கொண்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் இலங்­கையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு பெற்­றோர்­களை இழந்த சிறார்­க­ளுக்­காக ஒரு இசை நிகழ்ச்­சியை இல­வ­ச­மாக நடாத்­தினால் நல்­ல­தாக அமையும். அதற்­கான முயற்­சி­களை எடுப்­பீர்­களா? என கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

இதற்கு பதி­ல­ளிக்கும் போதே இரு­வரும் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளனர்.  

அவர்கள் மேலும் தெரி­விக்­கையில்:

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தியில் நின்று கொண்டே சொல்­கின்றேன். இங்கு உள்­ள­வர்­க­ளாக இருந்­தாலும் அல்­லது வேறு யாராக இருந்­தாலும், இப்­ப­டிப்­பட்ட நிகழ்­வு­களை இல­வ­ச­மாக நடாத்திக் கொடுப்­ப­தற்கு நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். 

ஆனால் அந் நிகழ்ச்­சி­யா­னது எதற்­காக பயன்­பட வேண்­டுமோ அதற்­காக முழு­மை­யாக பயன்­பட வேண்டும். இவ்­வா­றான முயற்­சிக்கு நாங்கள் நிச்­சை­ய­மாக பங்­க­ளிப்பு வழங்­குவோம்.

இவ்­வா­றான நிகழ்­வு­களை ஒழுங்கு செய்­வ­தற்கு பல குழுக்கள், நிறு­வ­னங்கள் உள்­ளன. அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரையும் குறை சொல்லிக் கொண்டு இருக்­காமல் அனை­வரும் ஒன்­றி­ணைந்து  நிகழ்­வு­களை ஒழுங்கு செய்ய வேண்டும். குறிப்­பாக சமூக வலைத்­த­ளங்­களில் குறை­கூ­று­வதை நிறுத்த வேண்டும்.

 நிகழ்­வு­களை ஒழுங்கு செய்யும் போது, அனைத்து கழ­கங்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்­கான நிகழ்­களை இங்கு நடாத்­து­வ­தற்கு நாங்கள் தயா­ரா­கவே உள்ளோம்.

இவ்­வா­றான நிகழ்­வு­களை எதிர்ப்­ப­வர்­களும், ஆத­ரிப்­ப­வர்­களும் ஒன்­றி­ணைந்து வாருங்கள் ஒன்று சேர்ந்து நடாத்­துவோம்.

இலங்கை இசைக்­க­லை­ஞர்­களும் இசைக் கல்­வியை கற்­றுக்­கொள்ள கூடிய ஒர் கல்லூரியை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் இதற்கான ஆரம்ப வேலைத்திட்டத்தை யாழ்.இந்திய துணைத்தூவர் ஊடாக மிக விரைவில் கலைஞர்களுக்கும் மக்களும் அறிவிப்போம். அத்துடன் இக் கல்லூரியில் நாமும் வந்து இசைக் கல்வியை போதனை செய்வோம் என தெரிவித்திருந்தனர்.