பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வருகிறார் பிரதமர் மோடி

15 Feb, 2022 | 04:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பில் எதிர்வரும் மாதம் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ள 5 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரச தலைவர்களுக்கு உத்தியோகப்பூரவமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் மாநாடு இடம் பெறுவதற்கு முன்னர் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிடுகையில்,

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பு (பிம்ஸ்டெக்) 5ஆவது உச்சிமாநாடு எதிர்வரும் மாதம் 31ஆம் திகதி இலங்கையில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. 

பங்களாதேஷ்,பூட்டான்,இந்தியா,மியன்மார்,நேபாளம் மற்றும் இலங்கை,தாய்லாந்து ஆகிய நாடுகள் பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன.

பிம்ஸ்டெக் அமைப்பில் கலந்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்த அழைப்பினை இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் முன்வைத்துள்ளேன்.

பிம்ஸ்டெக் மாநாடு இடம்பெறுவதற்கு முன்னர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்தேன்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினையேற்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எதிர்வரும் மாதம் 18 அல்லது 20ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

உலக மொத்த சனத்தொகையில் 22 சதவீதமான மக்கள் பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளில் வாழ்கிறார்கள்.

சர்வதேச போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைளில் நான்கில் ஒரு பங்கு பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே இலங்கையில் அந்த அமைப்பின் மாநாட்டை நடத்துவது இலங்கைக்கு பல்வேறு துறை முன்னேற்றத்திற்கு சாதகமாக அமையும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27