போதைப்பொருள் கடத்தல்: 18 வயது இளைஞர் உட்பட ஏழு பேர் கைது

Published By: Digital Desk 4

14 Feb, 2022 | 03:45 PM
image

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட 18 வயதுடைய இளைஞர்  உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு- கிரான்பாஸ்

கிரான்பாஸ் - களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 8 கிராம் 70 மில்லிகிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது 18 வயதுடைய வெல்லம்பிட்டியவை சேர்ந்த இளைஞன் கைது

செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெத்துள்ளனர்.

பேலியகொடை

பேலியகொடை - களனி பாலத்திற்கு அருகில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 240 மில்லிகிராம் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை

கடவத்தை – மங்கடை பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 300 மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 24 வயதுடைய தெல்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார். கடவத்தை

பொலிசார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலங்கமை

தலங்கமை மேற்கொண்ட இருவேறு சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கலல்கொடை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 100 மில்லிகிராம் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றுமொரு சுற்றிவளைப்பில் அகுரைகொடை பிரதேசத்தில் 5 கிராம் 300 மில்லிகிராம் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இரு சம்பவங்கள் தொடர்பிலும் தலங்கமை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொரளை

பொரளை - கொதமீபுரை பிரதேசதில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 கிராம் 510 மில்லிகிராம் போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுனுகம்வெகரை

லுனுகம்வெகரை - ரணவர்னாமை பிரதேசத்தில் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 745 கஞ்சா போதைப்பபொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ரணவர்னாவை, தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்னர். சம்பவம் தொடர்பில் லுனுகம்வெகரை பெலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47