க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

Published By: Vishnu

14 Feb, 2022 | 03:31 PM
image

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம், திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் சுமார் 98,000 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறவில்லை. இவர்களுள், கணிதப் பாடத்தில் சித்தியடையாத, ஆனால் பின்னர் அதன் பெறுபேற்றை பெற்றுத் தருவதாக கூறி க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகைமை பெறாத மாணவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் இனங்காணப்பட்டு அவர்களின் திறன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55