ஊடகவியலாளர் சமுதித வீட்டின் மீது தாக்குதல் - 3 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை

Published By: Digital Desk 4

14 Feb, 2022 | 03:25 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீட்டின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் நேரடி ஆலோசனைகளுக்கமைய 3 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

No description available.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 

இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 - 2.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பிலியந்தல பொலிஸ் பிரிவில் , கங்காராம வீதி - கிரோன்விஸ் டெரஸ் தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வரும் சமுதித சமரவிக்கிரம என்ற ஊடகவியலாளர் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு வீட்டிற்குள் திரப்பொருளொன்றும் விசப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் நேரடி ஆலோசனைக்கமைய , மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய கல்கிஸை பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 3 விசேட பொலிஸ் குழுக்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்கிஸை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் அவரது குழுவினர் , கெஸ்பேவ பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மற்றும் பிலியந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு குற்ற ஸ்தள பரிசோதனைக் குழுவினர் , கைரேகை சோதனை பிரிவினர் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு , மோப்ப நாய்களைப் பயன்படுத்தி சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புலனாய்வு பிரிவினரால் சி.சி.ரி.வி. காணொளிகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு குழுவினர் நேரடி சாட்சிகளை சேகரிப்பதற்காக களத்திற்கு சென்றுள்ளனர். இது தொடர்பில் நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47