காதலர் தினம் ; விருந்துபசார நிகழ்வுகள் குறித்து அவதானம் செலுத்துமாறு பொலிஸாருக்கு அறிவிப்பு

Published By: Vishnu

14 Feb, 2022 | 02:11 PM
image

சமூக ஊடக தளமான பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் சம்பந்தப்பட்ட இரண்டு விருந்துபசார நிகழ்வுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், தஹையாகம ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்றில் ஐஸ், கஞ்சா உள்ளிட்ட பல போதைப் பொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, கண்டியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப் பொருள்களுடன் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக ஹோட்டல்களில் விருந்துபசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

இதேவ‍ேளை காதலர் தினமான இன்றைய தினம் ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வுகளில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறு நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31