காதலின்  தினம் - "காதலடி நீ  எனக்கு, காந்தமடி நான் உனக்கு" 

14 Feb, 2022 | 04:55 PM
image

(குமார் சுகுணா)




நேற்று, இன்று, நாளை என்ற கணக்குகளை கடந்த காதலை  ஒரு நாளில் கொண்டாடி தீர்க்க முடியாது. ஆனாலும் இன்றைய தினத்தை உலகம் காதலர்களின் தினமாக காதலின் தினமாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றது.

யுகங்களை தாண்டி எல்லா நாளும் கொண்டாடப்படுகின்ற காதலை... வருடத்தில் ஒரு நாள் காதலர் தினமாக கொண்டாடுகின்றோம்.

எல்லா நாளும் காதலித்து வாழ்பவரும் உண்டு பைத்தியமாக காதலித்து சாபவரும் உண்டு. காதலர்கள் மாறினாலும்  காதலர்கள் மரித்தாலும் காதல் என்றும் மாறுவதில்லை.  மரிப்பதும் இல்லை. மனங்களுக்கு இடையே உயிர்களுக்கு இடையே காற்றை ஊடருத்து காலங்களை கடந்து அது வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.


காதல்… மானுடங்கள் மட்டுமின்றி எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் அற்புதம். எல்லா ஜீவன்களும் ஏதோ ஒரு கணத்தில் காதல் வயப்பட்டவைதான்.


 பருவ மாற்றம், உருவ மாற்றம், வயது கோளாறு ,ஹோமோன் பிரச்சினை என்று காதலுக்கு விஞ்ஞானம் ஆயிரம் காரணங்களை கூறலாம். ஆனால் காரணங்களை கடந்ததுதான் காதல்.


இனம், மதம், வயது, மொழி,  ஜாதி, தேசம் என அத்தனை பேதங்களையும் கடந்ததுதான் காதல். நான்  காதலிக்கவில்லை என்று யாருமே கூறமுடியாது. ஏதோ சந்தர்பத்தில் காதலுக்குள் சிக்குண்டு போயிருப்போம். நம்மை மறக்கவைத்து உயிரை சிலிர்க்க வைத்திருக்கும் அந்த உணர்வு.


காதல் என்பது காதலர்களை சேர்த்து வைத்து உடல் பசியை தீர்ப்பது  மட்டும் என்று சிலர் தவறாக நோக்குகின்றனர். காதல் என்பது உடற்பசியெல்லாம் தீர்ந்த பின்னரும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழும் முதியோரிடையேயும் நெகிழ்ச்சியாய் இளமையாய்  வாழும்.


எப்போதோ காதலித்து இருப்போம். ஒரு பக்கம் அது பொய்யாக கூட இருந்திருக்கலாம். வெறுப்பில் வேண்டாம் என்று உதறிய பின்னரும்  மழையில் ஊரிய  காகிதத்தில் ஒற்றிகொண்டிருக்கும் கடைசி மை போல நமக்குள் எங்கோ ஒளிந்துக்கொண்டிருக்கும்  நாம் காதலித்தவரின் முகம். அதுதான் காதல்.


காதலர்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், உண்மையான காதலை யாரும் வெறுப்பதில்லை. இந்த பூமியில் இரண்டு உயிர்களுக்கு இடையே வரும் அந்த காதல் உணர்வை பலர் கெளரவத்திற்காக கொலை செய்வதும் உண்டு.இது போன்ற சந்தர்பங்களில் அழிவது அந்த காதலர்களாகதான் இருக்குமே தவிர காதலாக இருக்காது. நம்மோடு பின்னிப்போன காதலை எவராலும்  எவரிடத்தில் இருந்தும் பிரித்தெடுக்க  முடியாது.


எந்த குடும்பமாக இருந்தாலும் அங்கு  காதல் இருந்தால்தான் மகிழ்ச்சி பெருகும். நாம் வாழ்வதற்கு காரணம் பஞ்சபூதங்கள் மட்டும் அல்ல. காதலும் தான்.  அன்பை பகிர்ந்தால்.. கொடுத்தால் மட்டுமே நிம்மதியும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும்.

ஆண்டு முழுவதும் காதல் செய்தாலும், காதலைக் கொண்டாட ஒரு நாள் எதற்கு எனில்  சுற்றும் பூமியை விட அதிகமாக இன்று  நம்மி்ல் பலர் வேலைப்பளுவில் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

இதில் நம்மையே மறந்து  இயந்திரமாகிவிடுகின்றோம்.  இயந்திரமாகி போன நமது இதயத்தை ஈரளிப்பாக்கதான்  இந்த காதலர் தினம்.


காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும், காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம், ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே என்றான் பாரதி. நாமும் காதல் செய்வோம். காதல் தினத்தில் மட்டும் அல்ல.  எல்லா நாளும் எல்லா நொடியும் காதலிப்போம். காதலித்தே காதலாக கரைந்துபோவோம். 


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22