திருமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரம் : இனவாதிகள் சிலர் அரசியல் செய்வதற்கு முயற்சி - சுட்டிக்காட்டுகின்றது சிவில் சமூகம்

14 Feb, 2022 | 02:09 PM
image

(நா.தனுஜா)

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு அண்மையில் அபாயா அணிந்து கற்பித்தல் பணிகளில் ஈடுபடச் சென்றதன் காரணமாக ஆசிரியையொருவர் பாடசாலை வரவுப்புத்தகத்தில் கையெழுத்திடவோ அல்லது கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ அனுமதிக்கப்படாததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பாடசாலை வளாகத்தில் அமைதியின்மை நிலையுருவானதுடன் அச்சம்பவம் பல்வேறு சர்ச்சைகளையும் தோற்றுவித்திருக்கின்றது.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடந்த 2018ஆம் ஆண்டில் அபாயா அணிந்து கற்பிக்கச்சென்ற ஆசிரியைகளை அபாயா அணியக்கூடாது என்றும் சேலை அணிந்து வருமாறும்கூறி சண்முகா கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியிருந்தது. 

அதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் நால்வர் இதுகுறித்து 2018ஆம் மே மாதம் 2ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடளித்தனர். 

அந்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு குறித்த சம்பவம் மனித உரிமை மீறல் எனத் தீர்மானித்ததுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீண்டும் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்படவேண்டும் என்பது உள்ளடங்கலாக 5பரிந்துரைகளைக் கடந்த 2019 பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முன்வைத்தது.

இருப்பினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாததைத் தொடர்ந்து  அவற்றை அமுல்படுத்துமாறு உத்தரவிடக்கோரி மேற்கூறப்பட்ட ஆசிரியைகள் நால்வரில் ஒருவரான பாத்திமா பஹ்மிதா ரமீஸ் மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார்.

அதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றில் காணப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்வியமைச்சின் செயலாளரால் அனுப்பப்பட்ட இடமாற்றுக்கடிதத்திற்கு அமைய இம்மாதம் 2ஆம் திகதி சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்குக் கற்பித்தல் பணிகளுக்காகச்சென்ற ஆசிரியர் பஹ்மிதா  அங்கு பாடசாலை சமூகத்தினதும் வெளியிலிருந்து வருகைதந்ததாகக் கூறப்படும் பெற்றோர்களினதும் எதிர்ப்பிற்கு முகங்கொடுத்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-02-13#page-20

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22