ஜெனிவா நலன்களுக்காக அரசியல் தீர்மானங்களை எடுக்க முடியாது - நாமல் ராஜபக்ஷ

12 Feb, 2022 | 08:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜெனிவாவின் விருப்பத்திற்கமைய அரசியல் தீர்மானங்களை எம்மால் எடுக்க முடியாது. சிறைக்கைதிகளின் விடுதலை ஜெனிவாவிற்கு ஒரு பிரச்சினையாக அமையாது. 

நாட்டு மக்களின் நலனையும்,பொதுச்சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் செயற்படும் என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிறைக்கைதிகளின் விடுதலை,சிறைச்சாலைக்குள் நிலவும் கைதிகளின் நெரிசலை குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலை விவகாரத்தில் முன்னேற்றகரமான பல விடயங்கள் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணைகள் இல்லாமல் கைதிகளை தொடர்ந்து சிறையில் தடுத்து வைப்பது எந்தளவிற்கு நியாயமாகும்

கடந்த அரசாங்கத்தில் நான் சிறையிலடைக்கப்பட்ட போது வழக்கு விசாரணைகள் இல்லாமல் பலகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் என்னுடன் உரையாடினார்கள்.

சிறைக்கைதிகளின் விடுதலை ஜெனிவாவிற்கு ஒரு பிரச்சினையாக அமையாது. 

ஜெனிவாவின் விருப்பத்திற்கமைய அரசியல் தீர்மானங்களை எம்மால் எடுக்க முடியாது.

நாட்டு மக்களின் நலனையும்,பொதுச்சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் செயற்படும்.

கடந்த இரண்டு வருடகாலமாக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் நாம் ஈடுப்படவில்லை அதனையே எதிர்தரப்பினர் தமது அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

இனி ஆளும் கட்சியும் மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37