மங்கள சமரவீர அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமை கொண்டவர் - ரணில்

11 Feb, 2022 | 05:16 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

மங்கள சமரவீர மூன்று கதாபாத்திரங்களை கொண்டவராக இருந்தார். அவரின் எரிபொருள் சூத்திரம் இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரித்திருக்காது என முன்னாள் பிரதமரும்  ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11)  இடம்பெற்ற காலம் சென்ற முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,

1989 முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலும் ஒரு கதாபாத்திரத்தை வழங்கினார். 

சந்திரிகா குமாரதுங்கவின் நடவடிக்கைகளுக்கும், மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கும் பிரதான பங்காற்றினார். பின்னர் கட்சியில் இருந்து விலகி சுயாதீன உறுப்பினராக பணியாற்றினார்.

அவரின் இரண்டாவது கதாபாத்திரமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் செயற்பட்டார்.

இங்கு அமைச்சராக பல வேலைத்திட்டங்களை செய்தார். ஐ,நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தொடர்பிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 

குறிப்பாக வெளிவிவகார அமைச்சராக இருந்து லக்ஷ்மன் கதிர்காமர் மேற்கொண்ட விடுதலை புலிகளுக்கான தடை உத்தரவை தொடர்ந்து கொண்டு சென்றார். 

அதேபோன்று யுத்தக்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவது தொடர்பில்  அவர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தார். 

அவரின் மூன்றாவது கதாபாத்திரமாக பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகியதை கூறலாம். 

என்னிடம் அவர் அரசியலில் இருந்து விலகுவது தொடர்பில் கலந்துரையாடினார். அவருடன் நானும் இணங்கியிருந்தேன்.  எனினும் புதிய அரசியல் பாதை தொடர்பில் அவதானம் செலுத்தினோம். 

லிபரல்வாத கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார். உண்மையான தேசப்பற்றாளராகவும் செயற்பட்டார்

குறிப்பாக நிதி அமைச்சராக இருந்து அவர் அறிமுகப்படுத்திய எரிபொருள் சூத்திரம் இன்று இருந்தால், தற்போது இருக்கும் எரிபொருள் விலையெற்றம் இந்தளவுக்கு சென்றிக்காது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00