சஜித் பொருத்தமற்றவர் : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே ஆட்சியை கைப்பற்றுவார் - டயனா கமகே

Published By: Digital Desk 3

11 Feb, 2022 | 04:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்குவேன்.

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்கும் தகுதி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கிடையாது. கட்சியை கூட முறையாக நிர்வகிக்க முடியாதவர் எவ்வாறு நாட்டை நிர்வகிப்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாரர்ளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தூரநோக்கு கொள்கையுடைய அரச தலைவர்.பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்திலிருந்து நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்கும் திட்டங்களை அவர் செயற்படுத்தியுள்ளார்.

நாட்டின் தலைநகரை அழகுப்படுத்த அவர் எடுத்த முயற்சியின் பிரதிபலனை தற்போது நாட்டு மக்கள் அனுபவிக்கிறார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினேன்.

அதனை தொடர்ந்து அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் மனசாட்சிக்கு அமைய நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஆதரவு வழங்கியுள்ளேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவேன்.ஜனாதிபதியின் நிர்வாகம் தோல்வியடைவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஜனாதிபதியின் தூரநோக்கு சிந்தனை நாட்டின் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்தும்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியை தற்காலிகமாகவே வழங்கியுள்ளேன். ஜனாதிபதி தேர்தலின் போது அவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டாம் என முக்கிய தரப்பினர்களிடம் அறிவுறுத்தினேன். 

பல்வேறு தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை அவரிடம் ஒப்படைத்தேன். கட்சியை ஒப்படைத்து 3 மாத காலத்திற்குள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நிர்வாகத்திற்கு பொருத்தமற்றவர் என்பதை விளங்கிக் கொண்டேன்.

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்கும் தகைமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கிடையாது. கட்சியை கூட முறையான நிர்வகிக்காதவர் எவ்வாறு நாட்டை நிர்வகிப்பார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே வெற்றிப்பெறுவார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19