காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுத்தால் டக்ளஸ் தூக்கில் தொங்க நேரிடும் -  கஜேந்திரன் 

11 Feb, 2022 | 01:01 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்த காலகட்டத்தில் பலர் காணாமல் போனதற்கு ஈ.பி.டி.பி.யும் காரணமாகும், இது குறித்த விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டால்  அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தூக்கில் தொங்க வேண்டி வரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. யான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். 

இதன்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட  ஈ.பி.டி.பி. எம்.பி. குல சிங்கம் திலீபன் , முடிந்தால் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைக் கூறி வழக்குத் தொடர்ந்து அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுங்கள் என சபையில் சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி. யான குல சிங்கம் திலீபனுடன் ஏற்பட்ட தர்க்கத்தின் போதே இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட துடன் சவாலும் விடுக்கப்பட்டது.

இந்த விவாதத்தில் உரையாற்றிய திலீபன் எம்.பி., எமது மீனவர்களின் பிரச்சினையை சிலர் அரசியல் மயமாக்கி அதில் குளிர்காய முயற்சிக்கின்றனர். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி காலத்தில் இலங்கைக்கு வந்தபோது எமது மீனவர்களின் பிரச்சினையை  இவர்கள் அவருடன் பேசியிருக்கலாம். 

ஆனால்  பாலியல் துஷ்பிரயோகம் . கொலை வழக்கில் கைதாகி  இந்திய சிறையில் வாடி உயிரிழந்த சுவாமி பிரேமானந்தாவின் சிஷ்யர்களை விடுதலை செய்யுமாறு கடிதம் எழுதிக்கொடுத்தார்கள். 

கிடைத்த சந்தர்ப்பத்தை நாசமாக்கியது தான் மிச்சம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒன்றரை வருடமாக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரவில்லையென சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.கூறுகின்றார். 

தீர்வு என்றவுடன் தமிழ் மக்களுக்கு  தமிழருக்கு பொங்கலுக்கு தீர்வு, தீபாவளிக்கு தீர்வு ,சித்திரைக்கு தீர்வு என்று இவர்கள் விட்ட அறிக்கைகள் தான் நினைவுக்கு வரும்.

கடந்த மாகாண சபை தேர்தல் நேரத்தில்  ''தமிழர்களுக்கு தீர்வில்லையேல் சாகும்வரை உண்ணாவிரதம் அடங்காத்தமிழன் சூளுரை'' என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டது. 

தேர்தலும் முடிந்தது.அவர் ஆதரவாளரும் வெற்றியும் பெற்றார். அந்த சுவரொட்டியை மாடு தின்றதுதான் மிச்சம். 

இன்று இங்குள்ள கஜேந்திரகுமார் அணியினர் காணாமல் போனவர்களின் உறவுகளை வைத்து பிழைப்பு நடத்துவது போல் அவர்களும் கொடுப்பனவுகளைக் கொடுத்து போராட்டங்களை நடத்துவதற்கு  தூண்டுகின்றனர் என்று கூறிக்கொண்டிருந்த போது எழுந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராஜா கஜேந்திரன், பலர் காணாமல் போனதற்கு ஈ.பி. டி.பி.யும் காரணம், அது தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெற்றால் உங்களின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தூக்கில் தொங்குவார், அந்த அச்சத்தில் தான் இந்த எம்.பி. இங்கு உளறிக்கொண்டிருக்கின்றார் என்று கூறினார்.

இதன்போது பதில் தெரிவித்த திலீபன் எம்.பி, அப்படி எமது அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது  குற்றச்சாட்டை  வைப்பவர்  டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைக் கூறி வழக்குத் தொடரலாம்.

அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கலாம். அதனை விடுத்து வெறும் வாய்ச்சவடலால் ஒன்றும் செய்ய முடியாது. 

யுத்த நேரத்தில் வெளிநாட்டுக்கு ஓடி தலைமறைவாக இருந்துகொண்டு இராணுவத்தினருக்கு சவப்பெட்டியை தயார் செய்து வையுங்கள் எனக்கூறி தமிழ் மக்களை உசுப்பேற்றி எமது மக்களை அழித்ததுதான்  மிச்சம் .

அதனைத்தான் மீண்டும் பழையபடி இவர்கள் இளைஞர்களை முற்றாக அழிக்கத்  தொடங்கியுள்ளனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04