பயங்கரவாத தடைச்சட்டம் மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது - ரவூப் ஹக்கீம் 

11 Feb, 2022 | 10:47 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.,சி.பீ,ஆர்  மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. 

அதனால்தான் ஐரோப்பிய நாடுகளும் அதுதொடர்பில் கருத்து தெரிவித்து வருகின்றன. அதனால் இந்த இரண்டு சட்டங்களிலும் நடைமுறைக்கு ஏற்றவகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி இரண்டாவது நாளாக இடம்பெற்ற நீதி அமைச்சின் கீழான குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை, ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதித்துறை சுயாதீனமானது. அதில் யாரும் செல்வாக்கு செலுத்துவதில்லை என நீதி அமைச்சர் சபையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த கருத்து உண்மை. 

ஆனால் 20ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றியதன் மூலம் நிறைவேற்று அதிகாரிக்கு, நீதித்துறையில் அதிகாரம் செலுத்த முடியுமாகி இருக்கின்றது. 

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பது தொடர்பாக சர்வதேச நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பேசி வருகின்றன. 

அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பயங்கரவாத தடைசட்டத்தின் திருத்தச் சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்திருந்தார். 

இதன்போது ஐரோப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் கேட்டபோது அவர் மழுப்பும் வகையில் பதிலளித்தார். 

அத்துடன் மனித உரிமை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உப குழுவில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருந்த கருத்தை இலக்குவைத்து வெளிவிவகார அமைச்சு அவருக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கின்றது. 

பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 22 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணைவழங்கி தீர்ப்பளித்த நீதிபதி நீல் இத்தவல, தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கும் விடயங்களை அனைவரும் வாசிக்கவேண்டும். 

குறிப்பாக அவரது தீர்ப்பில், பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிகமாகவே அறிமுகப்படுத்தப்பட்டதாகும். 

விடுதலைப்புலிகளை அடக்குவதற்கே அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஆனால் இன்று அது அரசியல் பழிவாங்கல் போன்ற மோசமான முறையில் பயன்படுத்தப்படுகின்றது என அவர் தெரிவித்திருக்கின்றார். 

 முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத்சாலி பயங்ரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். 

ஐ.சி.சி.பி,ஆர், சட்டத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. 

ஆனால் இந்த வழக்கு எவ்வாறு தொடுக்கப்பட்டது என்பதை வழக்கு விசாரணைகளில் கண்டறியப்பட்டு, அவர் மீது எந்த குற்றமும் இல்லை என தெரிவித்து, நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தது. 

மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த சில வார்த்தைகளுக்காக அவருக்கு பாரிய தண்டை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது. 

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.

அதனால் ஐ.சி.சி.பி,ஆர், மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் நடைமுறைக்கு ஏற்றவகையில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37