ஆளுந்தரப்பின் சவாலை ஏற்றது ஐக்கிய மக்கள் சக்தி : முடிந்தால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்தல்

Published By: Digital Desk 4

10 Feb, 2022 | 09:38 PM
image

(நா.தனுஜா)

அநுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஆளுந்தரப்பின் பொதுக்கூட்டத்தில் விடுக்கப்பட்ட சவாலை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, அதற்கமைவாக இயலுமாக இருந்தால் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை விரைவாக நடாத்திக்காட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கின்றது. 

இராணுவத்தை மாத்திரம் தண்டித்தால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் - ஐக்கிய மக்கள் சக்தி | Virakesari.lk

அதுமாத்திரமன்றி அதுமாத்திரமன்றி ஆளுந்தரப்பின் கூட்டம் நடைபெற்ற சல்காது மைதானத்தில் அடுத்த மாதம் தமது கட்சியின் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.  

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தின் வியாழக்கிழமை (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார் மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

அங்கு செய்தியாளர்கள் முன்பு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். 

அங்கு அவர்கள் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கம் தாம் ஆட்சிபீடமேறியவுடன் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தது. இருப்பினும் இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறி இருவருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

1000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டபோதிலும், பெருந்தோட்டக்கம்பனிகள் அதற்க இணங்கவில்லை.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு அமைவாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

அதனுடன் இணைந்ததாக பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை, நலன்புரி விடயங்கள் தொடர்பான பிரச்சினை என்பன உள்ளடங்கலாக இப்போது கலந்துரையாடித் தீர்வுகாணவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

தற்போது 26 வேலை நாட்களை வழங்கவேண்டும் என்ற சட்டம் தோட்டக்கம்பனிகளால் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

மாறாக 15 - 20 வேலை நாட்கள் என்ற முறைமையே அமுல்படுத்தப்படுகின்றது. எனவே நாளொன்றுக்கான சம்பளம் 750 ரூபா என்ற அடிப்படையில் நோக்குகையில், பெருந்தோட்டத்தொழிலாளர்களால் கடந்த காலத்தில் பெற்ற சம்பளத்தைக்கூடப் பெறமுடியவில்லை. 

1000 ரூபா சம்பளத்தை வழங்கவேண்டுமெனில், அதற்கு தனிநபரொருவரால் நாளொன்றில் அடைந்துகொள்ளமுடியாத இலக்கு வழங்கப்படுகின்றது. இவ்வாறு தொழிலாளர்களுடைய உரிமைகள் மீறப்படுவது குறித்து தொழில் அமைச்சில் முறைப்பாடு செய்ததுடன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன். 

இருப்பினும் அரசாங்கம் சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் தொழில் அமைச்சரும் தலையீடுசெய்து பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மறுபுறம் முன்னொருபோதுமில்லாத அளவிற்கு நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக்கூட முன்னெடுத்துச்செல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்கும் அதேவேளை, எரிவாயு, பால்மா போன்ற பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறைந்தபட்சம் மக்களின் வீடுகளில்கூட பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியவில்லை. எரிவாயு வெடிப்புச்சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், தவறிழைத்திருக்கக்கூடிய எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களுக்கு எதிராகத் தற்போதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மேலும் நேற்று  சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஆளுந்தரப்பின் கூட்டத்திற்கு மக்கள் எவ்வாறு அழைத்துவரப்பட்டார்கள் என்பதை நாம் அவதானித்தோம். அந்தக்கூட்டத்தில் ஆளுந்தரப்பினரால் விடுக்கப்பட்ட சவாலை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதன்படி முடிந்தால் விரைவில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

 அதுமாத்திரமன்றி ஆளுந்தரப்பின் கூட்டம் நடைபெற்ற சல்காது மைதானத்தில் அடுத்த மாதம் எமது கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10