ஜனநாயக நாட்டுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் ஏற்புடையதல்ல - உதயகுமார்

Published By: Digital Desk 4

10 Feb, 2022 | 09:33 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச அழுத்தங்கள் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இருந்தாலும் முக்கிய விடயங்களில் திருத்தங்கள் இடம்பெறவில்லை. என்றாலும் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். ஜனநாயக நாட்டுக்கு இது ஏற்புடையது அல்ல என எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் - எம் ...

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நீதி அமைச்சின் கீழான குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை, ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் அதிகார பரவலாக்கல் இன்றியமையாதது என்றும் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் இந்திய அரசாங்கம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அதேபோன்று இனப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக 13ஆம் திருத்தம் சட்டத்தின் மூலமாக மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மாகாணசபைகள் கலைக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்தும் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கின்றது. 

தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோல்வியடையும் என்ற அச்சத்திலேயே அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.

இதற்காக பல காரணங்களையும் தேரித்து அரசாங்கம் நாடகம் நடித்து வருகின்றது. இவர்கள் எத்தகைய நாடகத்தை நடித்தாலும் இறுதியாக மூடை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வீட்டுக்கு செல்லும் நிலையே அரசாங்கத்துக்கு ஏற்படும்.

தேர்தலை நடத்துவதற்கு சட்டப்பிரச்சினை இருந்தால், அதுதொடர்பான திருத்தங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டுவாருங்கள். அதற்கு நாங்கள் பூரண ஆதரவளிக்க தயாராக இருக்கின்றோம்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கை மனித உரிமையை மீறும் நாடு என்ற அவப்பெயரை சர்வதேச நாடுகள் தெரிவிக்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது.

யுத்த காலத்தில் இந்த சட்டம் ஏற்படுத்தப்பட்டது. அதனை நாங்கள் ஏற்கின்றோம். அந்த காலத்தில்கூட வடக்கு கிழக்கு இளைஞர்களுடன் மலைய இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு வந்தார்கள். இன்றும் அவர்கள் நீண்டகாலமாக சிறைகளில் இருந்து வருகின்றார்கள். 

ஆனால் இன்று யுத்த சூழல் இல்லை. அதனால் பயங்கரவாத தடைச்சட்டமும் தற்போது தேவையில்லை. அப்படியிருந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அதன் மூலம் ஜனநாயக குரல்வலை நசுக்கப்பட்டு வருகின்றதை காண்கின்றோம்.

அதேபோன்று சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்தாலும் முக்கிய விடயங்களில் திருத்தங்கள் இடம்பெறவில்லை.

என்றாலும் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். ஜனநாயக நாட்டுக்கு இது ஏற்புடையது அல்ல.

அததுடன் அரசாங்கத்தின் பிழையான கொன்கை காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசாங்கம் குறுகிய காலத்தில் ஒரு இலட்சத்தி 49 ஆயிரத்தி தொல்லாயிரம் கோடி ரூபா பணம் அச்சிட்டிருக்கி்றது.

இதனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. தெற்காசியாவில் அதிக பண வீக்கம் உள்ள நாடுகளில் இலங்கையே முதலிடத்தில் இருக்கின்றது. 

அதேபோன்று பணவீக்கம் வேகமாக அதிகரிக்கும் நாடுகளில் ஆசியாவில் இலங்கையே முதல் இடத்தில் இருக்கின்றது. அதனால் மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆனாகி இருக்கின்றது.

எனவே அரசாங்கம் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் அரசாங்கம் வழங்கும் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவு தனியார் ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அதேபோன்று மலைய பெருந்தோட்ட மக்களுக்கு 85ரூபாவுக்கு வழங்குவதாக தெரிவித்த கோதுமை மா இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் மலையக மக்களுக்கும் அரசாங்கத்தின் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52