தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு இலங்கை அரசு முயற்சி - சித்தார்த்தன்

10 Feb, 2022 | 09:26 PM
image

(எம்.நியூட்டன்)

தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இன்று தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இக் காலத்தில் தமிழ் மக்கள் தமது நலன்சார் வலுவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். 

அரசு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வேறு பல திணைக்களகங்கள் ஊடாகவும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது. 

குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிழக்குமாகணத்தில் தனது வேலைத்திட்டத்தை தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது.  இதனுடாக தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை இல்லாது செய்ய முனைகின்றது.

மறுபுறத்தில் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்காமல் தாமதப்படுத்துவதனுடாக அவ்விருதரப்பினர்களுக்குமிடையில் முரண்பாட்டை உருவாக்கின்றது.

இது போன்ற பல விடயங்களில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56