தற்கொலைக்கான காரணம் வெளியானது : ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலை வைத்த மாத்தறை இளைஞர் (காணொளி இணைப்பு)

Published By: Robert

09 Oct, 2016 | 12:03 PM
image

மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இளைஞர் ஒருவர் ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

மாத்தறை - காலிதாச பகுதியில் நேற்று காலை மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், தண்டவாளத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசியில் உரையாடியவாறு   திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார். 

இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் குறித்த இளைஞனி தற்கொலை தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

 அதில், “எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது… எனது வாழ்க்கையின் இறுதி நாள் இன்றாகும்” என பேஸ்புகில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

மேலும், தனது நண்பனுக்கு ரயில் பாதையில் எடுத்த செல்பியை அனுப்பியுள்ளார். அதில் “நான் இறந்ததை அறிந்தவுடன் பேஸ்புகில் பதிவு ஒன்றை போடவும்” என குறிப்பிட்டுள்ளார்.

கேக் வாங்குவதற்காக மாத்தறை பகுதிக்கு வந்த குறித்த இளைஞன் காதலில் ஏற்பட்ட மனவிரக்தி காரணமாகவே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09