அரசாங்கம் பொது மக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் உண்மையை கூற வேண்டும் - திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 3

10 Feb, 2022 | 04:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அரசாங்கம் பொது மக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் உண்மையை குறிப்பிட வேண்டும். எப்பிரச்சினைகளும் தோற்றம் பெறாததை போன்று அரசாங்கம் செயற்படுகிறது என லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொருளாதார பாதிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

பொருளாதார பாதிப்பிற்கு தீர்வு காண நீண்டகால கொள்கை திட்டம் வகுக்கப்படவில்லை. குறுகிய கால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 

தற்காலிக கொள்கை திட்டங்களினால் நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அரசாங்கம் பொது மக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் உண்மையை குறிப்பிட வேண்டும். எப்பிரச்சினைகளும் தோற்றம் பெறவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம்செயற்படுகிறது.

நாட்டு மக்கள் பொருளாதார மற்றும்சமூக பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பாரிய அபிவிருத்தி பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களை செயற்படுத்துமாறு அரச தலைவர்களிடம் பலமுறை தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளேன். எமது கருத்துக்களுக்கு அரசாங்கத்தில் மதிப்பளிக்கப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46