நுவரெலியா மக்களுக்கு வழங்குவதாகக் கூறிய 10 கிலோ மா எங்கே ? - வே.இராதாகிருஷ்ணன் 

10 Feb, 2022 | 01:45 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு நிவாரணமாக ஒரு மாதத்திற்கு 10 கிலோ மா கொடுப்பதாக அரசாங்கம் தெரிவித்தது. 

ஆனால் இன்றுவரை எம் மக்களுக்கு மா கிடைக்கவில்லை, மக்களின் சிறுசிறு சேமிப்பை கூட அபகரிக்கும் விதமாக அரசாங்கத்தின் வங்குரோத்து நிலை வெளிப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 9 ஆம் திகதி இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகளை (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

மாகாணசபைகளை திருத்த சட்டமூலம் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளது, ஆனால் நாட்டில் மாகாணசபைகளே இல்லை என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை. 

மக்களுக்கு நேர்மையான மாகாண சபைகளை உருவாக்கிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. 

மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாது, சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாது உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறான நேரத்தில் வேலை நிறுத்தத்த செயற்பாடுகளுக்கு தீர்வுகளை வழங்கி மக்களின் பக்கம் சிந்திக்க வேண்டும். மாறாக வேலை நிறுத்தத்தை தூண்டும் விதமாக செயற்படக்கூடாது. 

நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு நிவாரணமாக ஒரு மாதத்திற்கு 10 கிலோ மா கொடுப்பதாக அரசாங்கம் தெரிவித்தது. 

ஆனால் இன்றுவரை மா கிடைக்கவில்லை. 

அரசாங்கம் பொய்களை கூறாது மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். அதேபோல் ஊழியர் சேமலாப நிதியிலும் அரசாங்கம் கை வைத்துள்ளது.

மலையகத்தில் வாழும் மக்கள் இந்த நிதியை பெற்றுக்கொண்டு தான் இறுதிக்காலத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. 

அதற்கும் 25 சதவீத வரி என கூறி அவர்களின் கையிருப்பை அபகரிக்க எடுக்கும் நடவடிக்கை மோசமானது. 

மக்களின் சிறுசிறு சேமிப்பை கூட அபகரிக்கும் விதமாக அரசாங்கத்தின் வங்குரோத்து நிலை வெளிப்படுகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40