உலகளாவிய ரீதியில் 50% கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் - ஐரோப்பிய சுகாதார ஆணையம்

Published By: Digital Desk 3

10 Feb, 2022 | 12:19 PM
image

உலக சனத்தொகையில் 50% முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா பரவலால் பொதுமக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.  

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 40.34 கோடியாக அதிகரித்துள்ளது.  

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச சுகாதார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்ட ஐரோப்பிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் ஸ்டெல்லா கிரியகைட்ஸ் கூறும்போது, 

உலக சனத்தொகையில் முழு அளவில் 50% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திய நிலையில் நாம் இருக்கிறோம்.

சர்வதேச அளவில் நோயெதிர்ப்பு பெறுவதற்கான பிரசாரம் வெற்றி பெறுவதற்கு உறுதுணை புரியும் அடுத்த கட்ட முயற்சிகள் தேவையாக உள்ளன என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இதுவரை 165 நாடுகளுக்கு, 170 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்கி ஐரோப்பா உதவி செய்துள்ளது என்றும் கிரியகைட்ஸ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35