உறுதியான தகவல் இல்லாது கைதுசெய்யப்படுவது தொடர்பில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் - எதிர்க்கட்சி

10 Feb, 2022 | 11:53 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பத்திரிகைகளில் வெளியான பொய்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வைத்தியர் ஷாபி மற்றும் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு  நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். 

இவ்வாறான  நிலைமையை மாற்றுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் தனியான  மேற்பார்வை பிரிவு ஒன்றை அமைத்து உரிய ஆதாரத்துடன் கைது செய்யும்வகையில் சட்டத்தில் தித்தம் மேற்கொள்ளவேண்டும் என  எதிர்க்கட்சி உறுப்பினர் தலதா அதுகோரல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று 9 ஆம் திகதி இடம்பெற்ற நிதி அமைச்சின் கீழான குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை, ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாளாந்தம் வழக்கு விசாரணை மேற்கொள்ளும் போது நிதி தொடர்பான பிரச்சினை சாதாரண மக்களுக்கு ஏற்படுகின்றது. எமது காலத்தில் பாரிய மோசடிக்காரர்கள் தொடர்பில் விசாரிக்க ட்ரயல் எட் பார் விசாரணை முன்னெடுத்தோம்.

அவர்களுக்கு நிதி பிரச்சினை ஏற்படப்போவதில்லை. அத்துடன் வழக்கு தாமதத்தை குறைக்க நீதிபதிகள், நீதிமன்ற வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். 

தாம் விரும்பிய சட்டத்தரணியை தெரிவு செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும். நீதிபதிகள் நியமிக்கையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் ,தற்பொழுதுள்ள நீதிபதிகளின் கருத்தும் பெறப்படுகிறது. 

நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். அத்துடன் தற்போது ஊடக பிரபல்லியத்தின் கைது செய்யும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. 

எந்த காரணமுமின்றி ஊடகத்தில் சொல்வதை வைத்து  சிலர் தடுத்துவைக்கப்படுகின்றனர். 

வைத்தியர்  ஷாபி அதற்கு சிறந்த உதாரணம். கீர்த்தி மிக்க வைத்தியரான அவர் தடுத்து வைக்கப்பட்டார். 

பெண்கள் சம்பந்தமாக 4000 சத்திரசிகிச்சை தொடர்பில் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியை வைத்து அவரை பின்தொடர்ந்து சென்று காரணமின்றி ஒன்றரை வருடங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டார்.

அவர் பட்ட கஷ்டங்களை ஊடகமொன்றுக்கு கூறியிருந்தார். இவை அரசியல் பழிவாங்கல்களாக கூட இருக்கலாம். அவரின் கைது முழு வைத்திய துறைக்கும் ஏற்பட்ட பாரிய இழுக்காகும்.

அவரின் பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்பட்டனர். அதேபோன்று மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி என்ன அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டார்.

இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். அதனால் விசாரணை நடத்தும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையானவாறு செயற்படுகின்றன.சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் தனியான  மேற்பார்வை பிரிவு ஒன்றை அமைத்து தகவல்களை உறுதி செய்த பின்னர்  சட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க சி.ஐ.டி அல்லது  பொலிசாருக்கு  வழிகாட்டவும் உரிய ஆதாரத்துடன் கைது செய்யும்வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30