மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சு 

10 Feb, 2022 | 10:22 AM
image

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை இந்த வருடத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் மத்தளை சர்வதேச விமான நிலையத்தினூடாக சர்வதேச விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கு உலக நாடுகளின் விமான சேவை நிறுவனங்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக இதுவரையில் மொத்தமாக 32,957 பேர் விமானசேவைகளை பெற்றுள்ளதாகவும் இதற்காக 722 விமான பயணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றுள் 584 சிறப்பு விமான பயணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி மூன்றாம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு இதுவரையில் 2919 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33