பொரளை தேவாலய கைகுண்டு விவகாரம் : கைது செய்யப்பட்ட வைத்தியரின் மகன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்டவற்றுக்கு கடிதம்

Published By: Digital Desk 3

10 Feb, 2022 | 09:30 AM
image

(எம்.மனோசித்ரா)

பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்திலிருந்து கைகுண்டுகள் மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியரின் மகன், எவ்வித குற்றமும் இழைக்காத தனது தந்தைக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அலுவலகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் இருந்து விலகுமாறு இலங்கை அரசுக்குத் தெரிவிக்க மேற்கூறப்பட்ட அலுவலகங்களைப் பயன்படுத்துமாறு வலியுறுத்துவதாகவும்,  இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு எனது தந்தையின் நலனையும், விடுதலையையும் பெற்றுத் தருமாறும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வைத்தியரின் மகனான ஓஷல ஹேரத் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி 17 ஆம் திகதி 75 வயதுடைய எனது தந்தை, சகோதரி , மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் என்று தெரிவித்து ஒரு குழுவினர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த குழுவினர் வீட்டிலிருந்தவர்களிடமிருந்து தொடர்பாடல் கருவிகளைப் பெற்றுக் கொண்டு எனது தந்தையையும் வாகனமொன்றில் அழைத்துச் சென்றுள்ளனர்.

நாங்கள் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் இருந்து கத்தோலிக்கர்களாக இருந்து வருகிறோம். எனது தந்தை ஒரு புகழ்பெற்ற அரச ஊழியராவார். இன்றுவரை அவர் தனது தனிப்பட்ட பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

ஜனவரி 20 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற ஒரு அழைப்பைத் தவிர, அதன் பின்னர் நான் எனது தந்தையை சந்திக்கவில்லை. சகல புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டமைக்கு நிதியளிப்பதாக அவர் 'ஒப்புக்கொண்டார்' என்று செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டினால் நாம் கோபமடைந்தோம். என் தந்தையைப் பார்ப்பதற்கு எந்த வழக்கறிஞரும் அனுமதிக்கப்படவில்லை. கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது சட்டத்தரணிகள் பிரசன்னமாகிய போதிலும் இதுவே இடம்பெற்றுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் எமது வழக்கறிஞர்களுக்கும் எனக்கும் பொலிஸாரினால் பல பொய்கள் கூறப்பட்டன.

எனது தந்தையை அழைத்துச் சென்றவர்கள் கூறிய பொய்கள் தொடர்பில் செய்தியாளர் மாநாட்டினையும் நடத்தினேன். அதன் பின்னர் எனது தந்தை என்னை அழைத்து என்னிடம் 'அமைதியாக இரு' என்று கூறினார். இதன் போது அவர் பயங்கரமாக மிரட்டப்பட்டிருக்கின்றார் என்று தோன்றியது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரிதொரு நபர் அதனை ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் பொலிஸாரினால் கூறப்பட்ட கதையை பேராயர் முற்றாக மறுத்தார். அதன் பின்னர் பிரிதொரு நபரும் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து தான் தற்போது எனது தந்தையை கைது செய்துள்ளனர். என் தந்தையும் ஒரு 'ஒப்புதல் வாக்குமூலம்' வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஒரு குடும்பமாக நாங்கள் எந்த மனிதனும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சோதனைக்கு ஆளாகியுள்ளோம். கடவுளுக்கு பயந்த ஒரு அப்பாவி தடுப்பு காவலில் வைக்கப்பட்டு அவருக்கு எதிராக ஒரு வழக்கு புனையப்பட்டுள்ளது. இன்றுவரை என்னிடம் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. பொலிஸாரின் பொறுப்பிலெடுக்கப்பட்ட பொருட்களின் விவரப்பட்டியல் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

எமது வீட்டில் இருந்த சி.சி.டி.வி கருவிகளையும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். எனது 75 வயதான தந்தை குற்றமற்றவர் என்பதை மீண்டும் குறிப்பிடும் அதே வேளையில், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் இருந்து விலகுமாறு அரசுக்குத் தெரிவிக்க உங்கள் அலுவலகங்களைப் பயன்படுத்துமாறு நான் வலியுறுத்துகிறேன். 

எனது தந்தை இன்றுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு எனது தந்தையின் நலனையும், விடுதலையையும் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37