இந்திய மீன்பிடிப்படகுகள் இலங்கையில் ஏலம் : இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிவிப்பு 

Published By: Digital Desk 4

09 Feb, 2022 | 09:33 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் மீட்கப்படாத இந்திய மீன்பிடிப்படகுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கான தமிழகத்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்திருக்கின்றது.

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் மீன்பிடித்த 13 பேர் கைது | Virakesari.lk

இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொடர்பில் வீரகேசரியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையில் இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொடர்பில் பல்வேறு செய்திகளும் கருத்துக்களும் வெளியாகியுள்ளமையை நாம் அவதானித்துள்ளோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு காணப்படுவது குறித்து வலியுறுத்திக்கூறுகின்றோம்.

இந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் இலங்கையில் மீட்கப்படாத இந்திய மீன்பிடிப்படகுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கான இந்தியாவின் தமிழகத்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகைதரவிருக்கின்றது.

அக்குழுவின் வருகைக்கான அனுமதி இலங்கை அரசாங்கத்திடமிருந்து உயர்ஸ்தானிகரகத்தினால் பெறப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38