தங்கத்தின் இருப்பு ஜனவரியில் 92 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி!

Published By: Vishnu

09 Feb, 2022 | 04:02 PM
image

(நா.தனுஜா)

இலங்கை மத்திய வங்கியின் வசம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருப்பாகக் காணப்பட்ட 175.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கம், இவ்வருடம் ஜனவரி மாதத்தில் 92 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி கடந்த ஒருமாத காலத்தில் 83.4 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி நவம்பர் மாதம் (2021) 382.2 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட தங்கத்தின் இருப்பு, டிசம்பரில் 206.8 மில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்து 175.4 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் மத்திய வங்கியின் வசமிருந்த 83.4 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா வைரஸ் பரவல் மற்றும் செயற்திறனற்ற பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டுக்கையிருப்பு வெகுவாக வீழ்ச்சியடைந்திருப்பதுடன் நாடு பாரிய நிதிநெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. 

இந்த நெருக்கடியைக் கையாள்வதற்கான மத்திய வங்கி அதன்வசமுள்ள தங்கத்தை விற்பனை செய்வதாகவும் இது நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக அவ்விடயத்தை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள ஹர்ஷ டி சில்வா, வெளிநாட்டுகையிருப்பு 2.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சிகண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட 10 பில்லியன் யுவான்களைப் (1.57 பில்லியன் டொலர்கள்) பயன்படுத்த முடியாது என்பதால் 2.36 பில்லியன் டொலர்களிலிருந்து அதனைக் கழிக்கும்போது, பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி 800 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடையும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அது 3 வாரங்களுக்கும் குறைவான காலத்திற்குரிய இறக்குமதிகளுக்கு மாத்திரமே போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.

 'இப்போதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை என்றுதான் மத்திய வங்கியின் ஆளுநர் கூறப்போகின்றாரா?' என்று கேள்வி எழுப்பியுள்ள கலாநிதி ஹர்ஷ டி சில்வா, 'கையிருப்பில் காணப்பட்ட தங்கத்தில் சுமார் 50 சதவீதமான தங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடவிரும்பாத அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் மத்திய வங்கி ஆளுநரும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும் அனைத்தும் சுமுகமான நிலையிலிருப்பதாகவும் கூறுகின்றார்கள்' என்றும் விசனம் வெளியிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24