இலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியா - பீரிஸ்

09 Feb, 2022 | 03:51 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பரஸ்பர மூலோபாய நலன்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை ( 8 ) ஆம் திகதி இடம்பெற்றது. 

இந்த சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

தனது விஜயத்தின் போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் மற்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோருடன் முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டார்.

இரு அமைச்சர்களுக்குமிடையிலான சந்திப்பும், அதனைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் கந்த திங்களன்று டெல்லியிலுள்ள உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பரிவர்த்தனை உறவில் இருந்து மூலோபாய பங்காளித்துவமாக பரிணமித்துள்ளமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் பீரிஸ், இலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியாவாகும் என்பதை இலங்கை மக்கள் அதிகளவில் அங்கீகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போதைய நெருக்கடியான தருணத்தில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள 2.4 பில்லியன் டொலர் நிதி உதவியை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு எப்போதும் இலங்கைக்கு ஆதரவானதாக இருக்கும் என அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பு, வலு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு, இணைப்பு, மக்களுக்கிடையிலான தொடர்பு போன்றவை உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய்த் தாங்கி ஒப்பந்தம் குறித்தும் விசேட கவனம் செலுத்திய அமைச்சர் பீரிஸ், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பை எடுத்துக் காட்டுவதாகவும், அதனால் இரு நாடுகளுக்கும் வெற்றிகரமான சூழ்நிலையில் கணிசமான நன்மைகளை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். 

குறிப்பாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளிலான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்திய இக்கலந்துரையாடலில், மருந்துகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி போன்ற முன்னுரிமைத் துறைகளில் இந்திய முதலீடுகளுக்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தி அமைச்சர் பீரிஸ் இந்திய முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்தார். 

இலங்கையில் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறச் செய்வதற்காக அபிவிருத்தியடைந்து வரும் இந்திய வெளிப்புற சுற்றுலாவை பயன்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, மீன்பிடி சார்ந்த பிரச்சினை குறித்தும் அமைச்சர் பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடினார். 

இதனை ஒரு முக்கியப் புள்ளியாகக் குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பாக அனைத்து இருதரப்புப் பொறிமுறைகளையும் ஒன்றுகூட்ட வேண்டிய அவசரத் தேவை குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மார்சில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்கால ஒத்துழைப்பிற்கான முன்னுரிமைப் பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56