இந்தியாவின் நனோ நைட்ரிஜன் உர பரிசோதனைக்காக எமது விவசாய நிலம் வழங்கப்படுவதில் உண்மை இல்லை - சஷிந்திர ராஜபக்ஷ 

09 Feb, 2022 | 02:27 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நனோ நைட்ரிஜன் உரம் பயன்பாட்டில் இந்தியா எம்மைவிட அனுபவம் உள்ள நாடு என்பதால், இந்தியாவில் இருந்து குறித்த திரவ உரத்தை கொண்டுவந்தோம். 

அவ்வாறு இல்லாமல் எமது விவசாய நிலத்தை இந்தியாவுக்கு பரிசோதனைக்காக வழங்கப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்க்கிழமை (9 ) ஆம் திகதி நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பெரும்போகத்தின் போது இந்தியாவின் வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு 8இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் நெனோ நைட்ரிஜன் உரத்தை பரிசோதனைக்காக இடமளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

65மில்லியன் உருப்பினர்களை அங்கத்துவம் கொண்ட கூட்டுறவு சங்கம்தான் இந்தியாவின் இஸ்கோ நிறுவனம். சேதன பசளை திட்டத்துக்கு நாங்கள் செல்லும்போது அதுதொடர்பில் எமக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதியிடம் கேட்டிருந்தோம். 

அதன் பிரகாரம் சீனாவில் இருந்து  பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனையின் பிரகாரம் அங்கிருந்து சேதன உரத்தை கொண்டுவர தீர்மானிதோம். 

என்றாலும் குறித்த உரத்தின் தரம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கல் காரணமாக அதனை நாங்கள் இடைநிறுத்தினோம்.

அதனைத்தொடர்ந்து இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தோம். அதன் பிரகாரமே நெனோ நைட்ரிஜன் திறவ உரத்தை கொண்டுவர முடியுமாகியது. 

நெனோ தொழிநுட்பத்தை பயன்படுத்தி, எமது நாட்டிலும் உரம் தயாரிக்க நடவடிக்கை எடுத்துவந்தோம். 

என்றாலும் இந்தியா இதில் எம்மைவிட அனுபவம் உள்ள நாடு என்பதால், இந்தியாவில் இருந்து குறித்த திறவ உரத்தை கொண்டுவந்தோம். 

இவ்வாறு இல்லாமல் எமது விவசாய நிலத்தை இந்தியாவுக்கு பரிசோதனைக்காக வழங்கப்படவில்லை.

மேலும் இதுதொடர்பாக கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கின்றார். 

அத்துடன் குறித்த திறவ உரம் தொடர்பாக இந்திய கமத்தொழில் அதிகாரிகளுடன் பல கலந்துரையாடல்களை எமது அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர். அவர்களின் பரிந்துரைக்கமையவே நைட்ரிஜன் திறவ உரத்தை கொண்டுவர தீர்மானித்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00