எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் மருந்துத் தட்டுப்பாடு தீவிரமடையும் - எச்சரித்தார் ராஜித  

08 Feb, 2022 | 09:40 PM
image

(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடையும் இதனால் பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும்.

இப்பிரச்சினையின் பாரதூர தன்மையினை விளங்கிக் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை 8 ஆம் திகதி இடம்பெற்ற சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தற்போதைய சூழ்நிலைமையில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதி,உணவு பொருள் விநியோகத்துடன் தற்போது மருந்துபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது .

சந்தையில்  80 சதவீதமான மருந்து பொருட்களுக்கு  தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய மருந்து பொருட்கள் கொள்வனவு மற்றும் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் மருத்து துறையில் இலவசமாக வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைமைகளையும்,மருத்துவ உபகரணங்களையும் தற்போது பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

அக்காலக்கட்டத்தில் 25000 ரூபாவிற்கு வழங்கப்பட்ட கண் வில்லைகள்  தற்போது இலட்ச கணக்கிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மருந்துக்கான விலைக்கட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் தனியார் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றை கண்காணிக்க சுகாதார அமைச்சு மட்டத்தில் பொருத்தமான நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

டொலர் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற காரணத்தினால் ஒளடத இறக்குமதியாளர்கள் பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்கொள்கிறார்கள்.

மருந்து இறக்குமதிக்கான கடன் பற்று பத்திரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகிறது. பெனடோல் குழிசைகளுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் சாதாரண நடுத்தர மக்களின் சுகாதார பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் வெளிப்படைத்தன்மை யின் மீது நம்பிக்கை கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

எதிர்வரும் 3மாத காலத்திற்குள் நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்படும்.பல நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையில் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் மரணிக்க வேண்டிய நிலைமை  ஏற்படும்.

இதனை பாரதூரமான பிரச்சினையாக கருதி அரசாங்கம்  உரிய தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58