நட்டஈட்டுக்காக காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை - சாணக்கியன்

Published By: Digital Desk 3

08 Feb, 2022 | 04:51 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம். வசீம்)

நீதியமைச்சர் அலி சப்ரி வடக்கில் ஊடகச்சந்திப்பை நடத்தினால் மாத்திரம்  சர்வதேச ஆதரவை பெற முடியாது.

அரசாங்கம்  சர்வதே   ஒத்துழைப்பை  பெற வேண்டுமாயின் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் நட்டஈட்டுக்கு மாத்திரம் போராட்டத்தில் ஈடுப்படவில்லை என்பதை நீதியமைச்சர் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். பிளவுப்படாத இலங்கைக்குள் நியாயமான தீர்வினையே தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்ற சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு கடற்பரப்பில் தீவிரமடைந்துள்ள பிற நாட்டவர்களின் அத்துமீறல்களுக்கு மீன்பிடித்துறை அமைச்சர் இதுவரையில் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. இலங்கையின் கடற்பரப்பில் பலவந்தமான முறையில் ட்ரோலர் படகுகளின் பிரவேசத்தினால் தொடர்ந்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இப்பிரச்சினையினால் இரு வடக்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

வடக்கு கடற்பரப்பில் பலவந்தமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படும் வெளிநாட்டு மீனவர்கள் குறித்து உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு வடக்கு மக்கள் கடந்த 7 நாட்களாக வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள போதும் அரசாங்கம் இதுவரையில் இப்பிரச்சினைக்கு வினைத்திறான தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொரை கருத்திற் கொண்டு அரசாங்கம் வடக்கு மாகாணத்தை நோக்கி நகர்வதை அவதானிக்க முடிகிறது. அரசாங்கம் சர்வதேச ஒத்துழைப்பை பெற வேண்டுமாயின் அதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என  நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது. நட்டஈட்டை மாத்திரம் பெற்றுக் கொள்ள காணாமலாக்கட்டோரது உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்படவில்லை. 

தமது உறவுகளுக்கு என்னாயிற்று என்பதை அறிந்துக் கொள்வதை முன்னிலைப்படுத்தியே காணாமலாக்கட்டோரது உறவுகள் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிப்பதை அரசாங்கம் கைவிட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் எந்தளவிற்கு பாரதூரமானது என்பதை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளமை மகிழ்வுக்குரியது.

முக்கியமான தரப்பினர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் போது ஊடங்களில் அவ்விடயம் பெருவாரியாக பேசப்படுகிது. பெயர் தெரியாத பெரும்பாலான  தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பற்றி கதைக்க எவருமில்லை என்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்யுமாறு  தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

இதுவரை காலமும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்திறகு மாத்திரம் தாக்கம் செலுத்திய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் காலஙகளில் சிங்கள சமூகத்தின் மீதும் தாக்கம் செலுத்தும். அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடையும் போது அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்து போராட்டங்களை முடக்கும்.

தொல்பொருள் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாதுகாப்பு என்ற கோணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பல விடயங்களை உணர்த்துகிறது.

தொல்பொருள் பாதுகாப்பு விவகாரத்தில் அரசாங்கம் நியாயத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.பிளவுப்படாத இலங்கையில் அரசியல் தீர்வினையே தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40