நோயாளரிகள் பலர் மருந்தில்லாது உயிரிழக்க நேரிடும் - சபையில் எச்சரித்தார் ராஜித

Published By: Vishnu

08 Feb, 2022 | 02:51 PM
image

(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்து, பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும் என  ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போதைய சூழ்நிலைமையில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமி, உணவு பொருள் விநியோகத்துடன் தற்போது மருந்துபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது.

டொலர் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற காரணத்தினால் ஒளடத இறக்குமதியாளர்கள் பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்க்கொள்கிறார்கள். 

மருந்து இறக்குமதிக்கான கடன் பற்று பத்திரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகிறது. பெனடோல் குழிசைகளுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் சாதாரண நடுத்தர மக்களின் சுகாதார பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47