ஸ்ரீகாந்தின் ‘தி பெட்’ படத்தின் டீஸர் வெளியீடு

Published By: Digital Desk 4

08 Feb, 2022 | 12:52 PM
image

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தி பெட்’ படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது.

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). இப்படத்தினை ‘வெத்துவேட்டு’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இயக்கியிருக்கிறார். 

ஸ்ரீகாந்த் கதையின் நாயகனாக ஸ்ரீகாந்த்தும், அவருக்கு ஜோடியாக நடிகை சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜோன் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோகுல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் தி பெட் படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியானது. 

படத்தைப் பற்றி இயக்குநர் மணிபாரதி பேசுகையில்,“ ஓய்வு விடுதி ஒன்றில் அமையப்பெற்றிருக்கும் சொகுசு படுக்கை ஒன்றின் பார்வையிலிருந்து படத்தின் கதையை விவரித்திருக்கிறோம். புதுமையான பாணியிலான திரைக்கதையை உருவாக்கியிருப்பதால் தி பெட் படம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும்.” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35