திருகோணமலை - சேருவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில்  இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்று கட்டுபாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் தங்க நகர்  கிராமத்தில்  வசிக்கும்  வாழைச் சேனையை சேந்த  நளினி காந் என்பவரே  இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக  விசாரணைகளை சேருவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.