18 வயது யுவதி பாலியல் பலாத்காரம் : 20 வருடங்களுக்கு பின் மீள விசாரிக்கப்படும் வழக்கு

Published By: Digital Desk 4

07 Feb, 2022 | 05:27 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

18 வயது யுவதி ஒருவரை  பாலியல் பலாத்காரம் செய்தமை தொடர்பில், இரு பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள  வழக்கை நாளாந்தம் விசாரணைக்கு எடுக்க, நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி  தர்ஷிகா விமலசிறி திங்கட்கிழமை ( 7) உத்தரவிட்டார்.

பெண் மீது பாலியல் பலாத்காரம்:இரு இளைஞர்கள் கைது | Virakesari.lk

இந்த குற்றச் செயல் கடந்த 2001 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையில்,  மேலும் இந்த வழக்கை தாமதப்படுத்த முடியாது என திறந்த மன்றில் அறிவித்தே, நாளார்ந்தம் விசாரணை செய்வதற்கான திகதிகளை மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி அறிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் மார்ச் 15,16 மற்றும் 24 ஆம் திகதிகளில்  இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி,  அந்த தினங்களில் பிரதிவாதிகள் இருவரையும் மன்றில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என அறிவித்தல் அனுப்ப கட்டளைப் பிறப்பித்தார்.

கடந்த 2001ஆம் அண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 18 வயதான  யுவதி ஒருவர், தேவாலயத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையில் கடத்தப்பட்டு  பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் இரு பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பில் சுருக்கமுறையற்ற வழக்கு விசாரணையின் பின்னர் 2004 ஆம் ஆண்டு  சட்ட மா அதிபரால் நுவரெலியா மேல் நீதிமன்றில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த குற்றப் பத்திரிகைக்கு அமைய சுமார் 10 வருடங்கள் நடந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு  கடந்த 2015 டிசம்பர் 28 ஆம் திகதி அளிக்கப்பட்டது. 

ஈ.டப்ளியூ.எம். லலித் ஏக்கநாயக்க எனும் நீதிபதியால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.  அதன்படி,  பாலியல் பலாத்காரம் தொடர்பில்  பிரதிவாதிகளை குற்றளியாக கண்ட நீதிபதி,  முதல் குற்றச்சாட்டுக்கு இரு குற்றவாளிகளுக்கும் தலா 5 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனையும், 2ஆம், 3 ஆம்  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  தலா 18 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்திருந்தார்.

இதனையடுத்து, அந்த தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதிகள், மேன் முறையீட்டு நீதிமன்றில் மேன் முறையீடு செய்தனர்.  அந்த மேன் முறையீட்டை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம், வழக்கு விசாரணைகளின் ஆரம்பத்தில் பிரத்கிவாதிகளிடம் ஜூரி சபை ஒன்றின் முன் வழக்கை விசாரணைக்கு எடுக்க விரும்புகின்றீர்களா இல்லையா என அனுமதி கேட்டமை தொடர்பிலான பதிவுகள் வழக்காவணத்தில் இல்லை என்பதை அடிப்படையாக கொண்டு, மேல் நீதிமன்றின் தீர்ப்பை ரத்து செய்து மீள வழக்கை விசாரணை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 அந்த உத்தரவின் பின்னர் கடந்த 2019 பெப்ரவரி 4 ஆம் திகதி குறித்த வழக்கு,  விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. அப்போது   மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர், குறித்த விவகார வழக்கின் நீதிவான் நீதிமன்ற சுருக்க முறையற்ற விசாரணைகளை முன்னெடுத்தவர் என்பதால், வழக்கு விசாரணைக்கு வேறு ஒரு நீதிபதியை நியமிக்குமாறு பிரதம நீதியரசிடம் அவரால் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படியே, இவ்வழக்கு  இன்று (7) நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசூரிய  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ( பலாத்காரம் செய்யப்பட்ட பெண்) சட்டத்தரணி  சுரேன் டி பெரேரா ஆஜரானதுடன், இவ்விசாரணைகளுக்கு தனது சேவைப் பெறுநர் சாட்சியம் அளிக்க தயாராக இருப்பதாக கூறினார்.

இந் நிலையில், குற்றம் இடம்பெற்ற காலத்தை கருத்தில் கொண்ட நீதிபதி,  இவ்வழக்கை நாளாரந்தம் விசாரித்து முடிக்க வேண்டும் என தீர்மானித்தார்.  அதன்படியே வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது.

குற்றம் இடம்பெறும் போது, 18 வயதான இவ்வழக்கில்  பாதிக்கப்பட்ட பெண்,  தற்போது 39 வயதான இரு பிள்ளைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06