Logesh 

சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் ஹட்டன் பஸ் டிப்போவுக்கு முன்பாக மேற்கொண்டு வந்த ஆர்ப்பாட்டங்களால் இதுவரை 40 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

730 ரூபா சம்­பளம் தமக்கு வேண்டாம் என்றும் ஆயிரம் ரூபா­வுடன் வாரத்­திற்கு 6 நாட்கள் வேலையை பெற்றுத் தரு­மாறு கோரியும்   மலை­ய­கத் தின் பல பகு­தி­களில் வீதியில் இறங்­கி தொழி­லா­ளர்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.  

13 ஆவது நாளாக இன்றும் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்த தோட்டத் தொழி­லா­ளர்கள் டயர்­க­ளையும் கொடும்­பா­வி­க­ளை யும் எரித்து எதிர்ப்புக் கோஷங்­களை வெளி யிட்­டு வருகின்றனர்.

வீதி­களில் பேர­ணி­யாக சென்றும் வீதியை மறித்தும் இவர்­க­ள் போராட்­டத் தில் ஈடு­பட்­டனர். இதனால் ஹட்டன் பஸ் டிப்போவுக்கு 40 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.