மேலதிகமாக மானியம் கோருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - சகல அமைச்சுகளுக்கும் நிதியமைச்சர் ஆலோசனை

07 Feb, 2022 | 03:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மட்டுப்படுத்தும் விசேட ஆலோசனை வழிகாட்டலை நிதியமைச்சு அமைச்சர்களுக்கும், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அரச நிறுவன பிரதானிகளுக்கும் வழங்கியுள்ளது. 

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள மானியங்களுக்கு மேலதிகமாக மானியம் கோருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு நிதியமைச்சு சகல அமைச்சுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அரச செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதியும், கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை கடுமையான முறையில் செயற்படுத்துமாறு சகல அமைச்சுகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த நிதியத்தின் ஊடாக எரிபொருள் கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகளின் எரிபொருள் பாவனை செலவினை மட்டுப்படுத்துமாறும், அரச நிறுவனங்களின் தொலைப்பேசி கட்டணம், மின்கட்டணம் ஆகியற்றை கட்டாயம் முகாமைத்துவம் செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் மின்பாவனை செலவினை நூற்றுக்கு 10 சதவீதத்தினால் குறைத்துக் கொள்ளும் வழிமுறையினை செயற்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

காரியாலய கட்டடம் மற்றும் புதிய காரியாலய கட்டட நிர்மாணிப்பு பணிகள் வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய இரண்டு வருட காலத்திற்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கைக்கமைய அரச நிறுவனங்களின் தொலைப்பேசி கட்டண செலவினை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021.6 (01) ஆம் இலக்க சட்டத்திற்கமைய புதிய செயற்திட்டத்திற்காக மேலதிக மானியத்தை ஒதுக்கும் கோரிக்கையை தவிர்த்துக் கொள்ளுமாறும் நிதியமைச்சு சகல அமைச்சுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30