ஜப்பானின் கடல்சார் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல்கள் நேற்று (07) மாலை இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

“கஷிமா” (Kashima) , “செடோயுகி” (Setoyuki) மற்றும் “அசகிரி” (Asagiri) போன்ற கப்பல்களே இவ்வாறு இலங்கை வந்துள்ளன.

கப்பல்களில் வந்துள்ள ஜப்பானிய படையினர் இலங்கை கடற்படையினருடன் தங்களது தொழில் நிபுனத்துவங்களை பரிமாற்றிக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை வந்துள்ள கப்பல்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.