ஐ.சி.சி. பெறுமதிவாய்ந்த 19 வயதுக்குட்பட்ட அணியில் இலங்கை வீரர் வெல்லாகே

Published By: Vishnu

07 Feb, 2022 | 11:57 AM
image

(என்.வீ.ஏ.)

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்து முடிந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மிகவும் பெறுமதிமிக்க வீரர்களைக் கொண்டு ஐ.சி.சி. அப்ஸ்டொக்ஸ் அணி பெயரிடப்பட்டுள்ளது.

19 வயதுக்குட்பட்ட இந்திய அணித் தலைவர் யாஷ் தூல் தலைமையிலான இவ்வணியில் இலங்கையின் அணித் தலைவர், சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேயும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

Image

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய 16 நாடுகளில் 8 நாடுகளைச் சேர்ந்த 12 வீரர்கள் ஐசிச அப்ஸ்டொக்ஸ் மிகவும் பெறுமதிமிக்க அணியில் இடம்பெறுகின்றனர்.

இவ்வணியில் பிரதான சகல துறை வீரராக துனித் வெல்லாலகே 6ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்து இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக ஜொலித்த துனித் வெல்லாலகே 17 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். 

இதன் மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற பெருமையை வெல்லாலகே பெற்றுக்கொண்டார். இதில் இரண்டு 5 விக்கெட் குவியல்கள் அடங்குகின்றன.

இவர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி ஒரு சதம், ஒரு அரைச் சதத்துடன் மொத்தமாக 264 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

 

ஐசிசி அப்ஸ்டொக்ஸ் மிகவும் பெறுமதிக்க அணியில் இடம்பெறும் வீரர்கள் துடுப்பாட்ட வரிசையில்:

  1. ஹசீபுல்லா கான் (பாகிஸ்தான் - விக்கெட் காப்பாளர் - 2 சதங்கள் உட்பட 380 ஓட்டங்கள், 8 ஆட்டமிழப்புகளில் பங்களிப்பு)
  2. டேகு வில்லி (அவுஸ்திரேலியா - 278 ஓட்டங்கள்)
  3. டிவோல்ட் ப்றெவிஸ் (தென் ஆபிரிக்கா - 506 ஒட்டங்கள், 7   விக்கெட்கள். 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களை மொத்தமாகப் பெற்ற இரண்டாவது வீரர். இந்தியாவின் ஷிக்கர் தவான் 2004இல் 505 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்)
  4. யாஷ் தூல் (தலைவர் - இந்தியா - 229 ஓட்டங்கள். சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்ட தூல், பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்திய விதம் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.)
  5. தோமஸ் ப்ரெஸ் (இங்கலாந்து - 292 ஓட்டங்கள்).
  6. துனித் வெல்லாலகே (இலங்கை)
  7. ராஜ் பாவா (இந்தியா - சகலதுறை வீரர் - 252 ஓட்டங்கள், 9 விக்கெட்கள். உகண்டாவுக்கு எதிராக அவர் குவித்த ஆட்டமிழக்காத 162 ஓட்டங்கள் தனி நபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாகும்)
  8. விக்கி ஒட்ஸ்வால் (இந்தியா - 12 விக்கெட்கள்)
  9. ரிப்பொன் மொண்டொல் (பங்களாதேஷ் - 14 விக்கெட்கள். ஒரு போட்டியைத் தவிர்ந்த மற்றைய எல்லா போட்டிகளிலும் விக்கெட்களைக் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர்)
  10. அவைஸ் அலி (பாகிஸ்தான் - 15 விக்கெட்கள்)
  11. ஜொஷ் பொய்டன் (இங்கிலாந்து - 15 விக்கெட்கள்)
  12. நூர் அஹ்மத் (ஆப்கானிஸ்தான் - 10 விக்கெட்கள்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49