சர்வதேசத்திடம் கையேந்தி கடன்பெறும் நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது - ஐக்கிய மக்கள் சக்தி விசனம்

07 Feb, 2022 | 12:00 PM
image

(எம்.மனோசித்ரா)



பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் நாடுகள் பட்டியலில் இலங்கை 12 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது நாட்டில் பணவீக்கம் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏனைய நாடுகளிடம் கையேந்தி கடன் பெறும் நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் நாடுகள் பட்டியலில் இலங்கை 12 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது நாட்டில் பணவீக்கம் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2005 க்கு முன்னர் நாட்டில் சிரேஷ்ட நிதி அமைச்சர்கள் பலர் காணப்பட்டனர். அவர்களால் பொருளாதாரம் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டது.

ஆனால் 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் நிதி அமைச்சினை பொறுப்பேற்றதன் பின்னர் பொருளாதார சீரழிவு ஆரம்பமாகிவிட்டது.

2010 இல் 21 பில்லியன் டொலராகக் காணப்பட்ட வெளிநாட்டு கடன் , 2015 ஆகும் போது 42 பில்லியன் டொலராக அதிகரித்தது.

5 ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷ 21 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளார். ஆனால் 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 12 பில்லியன் டொலர் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்பட்டது.

சுதந்திரத்திற்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே அதிக கடன் பெறப்பட்டுள்ளது,
தற்போது தென்னாசிய நாடுகளிடம் கையேந்தி கடன் பெறக்கூடிய நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் , மாலைதீவு , பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிடம் மாத்திரமே இன்னும் கடன் பெறாமலுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் எவ்வித வெளிநாட்டு கடனையும் பெறவில்லை என்று கூறுகின்றார்.

ஆனால் கடந்த வாரம் தான் இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

எனவே கடன் பெறும் போது அதனை ஜனாதிபதிக்கும் அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.

இது இவ்வாறிருக்க பாக்கிஸ்தான் சீனாவிடம் 3 பில்லியன் டொலரைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

அந்த கடனில் 500 மில்லியன் டொலரை எமக்கு கடனாக வழங்குமாறு இலங்கை கோரியுள்ளது.

உண்மையில் இலங்கையிலுள்ள வளங்களின் அடிப்படையில் அவதானித்தால் , நாம் இவ்வாறு கையேந்தி கடன் கேட்டகக் கூடிய நாடு அல்ல.

தற்போது இறக்குமதி செய்யப்படும் அரிசியின் தரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது சரியான விடயமா? இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு வழங்குவதற்கான சிறந்த வேலைத்திட்டம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் காணப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி வழங்காமை, உரம் பிரச்சினை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு என்பனவே இந்த அரசாங்கம் அடுத்த தேர்தலில் தோல்வியடைவதற்கான பிரதான காரணியாக அமையும்.

30 ஆண்டுகளின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை முறியடித்து ஐக்கிய மக்கள் சக்தி அடுத்து ஆட்சியமைக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47